செய்திகள்
போலீசார் விசாரணை

ஆலங்குடியில் வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி- போலீசார் விசாரணை

Published On 2021-09-11 11:31 GMT   |   Update On 2021-09-11 11:31 GMT
ஆலங்குடியில் வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே பூவரசக்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் தனது முகநூலில் புதிய ரக மோட்டார்சைக்கிள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட விளம்பரத்தை பார்வையிட்டார். அதன் லிங்கை அஜித்குமார் கிளிக் செய்த நிலையில் மர்ம ஆசாமி, வாட்ஸ்அப் மூலம் அஜித்குமாரை தொடர்பு கொண்டார்.

மேலும் தான் ராணுவ வீரர் எனவும், தற்போது விஜயவாடா விமானநிலையத்தில் பணியாற்றிவருவதாகவும் கூறினார். மோட்டார் சைக்கிளுக்கானபணத்தை கூகுள் பே மூலம் அனுப்ப கூறினார்.

இதையடுத்து, அஜித்குமாரும் ரூ.44 ஆயிரத்து500ஐ அனுப்பினார். ஆனால் தெரிவித்தப்படி மோட்டார் சைக்கிளை அவர் விற்கவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அஜித் குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News