உள்ளூர் செய்திகள்
கோரிக்கை மனு

கறிக்கோழி வளர்ப்போர் கோரிக்கை மனு

Published On 2022-05-05 10:55 GMT   |   Update On 2022-05-05 10:55 GMT
மதுரையில் கறிக்கோழி வளர்ப்போர் அமைச்சர் மூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மதுரை

மதுரை மாவட்டம் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பாக அமைச்சர் மூர்த்தியை சங்க ஆலோசகர் உல்லாசம் பால்பாண்டியன் அவர்களின் தலைமையில் நிர்வாகிகள்  கஜேந்திரா குரூப் கண்ணன் தலைவர் அருண்பிரசாத், செயலாளர் மாயழகன், பொருளாளர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ் கணேஷ், முருகன், ரமேஷ், ஆகியோர் சந்தித்து  கோரிக்கை மனு அளித்தனர். 

அதில்,  கடந்த 15 வருடம் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் இடுபொருளின் விலைவாசி உயர்வின் காரணமாக   தொடர்ந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். கோழிப்பண்ணை தொழில் ஒப்பந்த அடிப்படையில் 45 நாட்களுக்கு கோழிகளை வளர்த்து கொடுத்தால் கிலோவிற்கு 6 ரூபாய் 50 பைசா என்று நிர்ணயித்து கொடுத்து வருகிறார்கள். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. 

எனவே கிலோவிற்கு 15 ரூபாய் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஈடுபட உள்ளோம். எனவே இதுதொடர்பாக முதல்-அமைச்சரும், அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலை காப்பாற்ற வேண்டும். மேலும் இந்த தொழிலுக்கு என ஒரு நலவாரியம் அமைத்து தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News