ஆட்டோமொபைல்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200: வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

Published On 2018-01-27 11:15 GMT   |   Update On 2018-01-27 11:15 GMT
ஹீரோ மோட்டோகார்ப் தனது புதிய எக்ஸ்ட்ரீம் 200சிசி மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
புதுடெல்லி:

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூரோ மோட்டோகார்ப் எக்ஸ்ட்ரீம் 200 மாடலை இந்தியாவில் ஜனவரி 20-ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளின் டீசரை ஹீரோ மோட்டோகார்ப் அனிமேஷன் வீடியோ வடிவில் வெளியிட்டிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெயப்பூரில் உள்ள ஹீரோ தொழில்நுட்ப மையத்தில் ஹீரோ மோட்டார்சைக்கிள் செல்வதை போன்ற அனிமேஷன் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. 2016 ஆட்டோ எக்ஸ்போவில் XF3R மற்றும் HX250 உள்ளிட்ட மாடல்களுடன் ஹீரோ மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.

எக்ஸ்ட்ரீம் 200 மாடலில் ஏர்பிளஸ் ஆயில் கூல்டு 200சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.96 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் இந்த மோட்டார்சைக்கிளில் பெரிய ஃபியூயல் டேன்க் மற்றும் பிரகாசமான கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. 200சிசி இன்ஜின் கொண்டிருக்கும் முதல் மோட்டார்சைக்கிளாக இது இருக்கிறது.



மேலும் ஹீரோவின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளில் பல்வேறு அதிநவீன, உயர்-ரக அம்டங்கள்: டேன்க் எக்ஸ்டென்ஷன்கள், சிறிய ஃபேரிங் மற்றும் எல்இடி பைலட் லேம்ப், காண்டர் செய்யப்பட்ட ஒற்றை சீட், கூர்மையான டெயில்பீஸ் மற்றும் டெயில் லேம்ப் கிளஸ்டர் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

இத்துடன் டிஜிட்டல் அனலாக் ஹைப்ரிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டெலிஸ்கோபிக் ஃபோர்க், கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட பின்புற ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு சக்கரங்களிலும் ABS வசதி கொண்ட டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம் என்றும் வாடிக்கையாளர்கள் விரு்மபும் பட்சத்தில் இதனை தேர்வு செய்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. 

புதிய மோட்டார்சைக்கிளின் இந்திய விலை ரூ.90,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இந்த மாடல் டி.வி.எஸ். RTR 200 மற்றும் பஜாஜ் பல்சர் 200NS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஹீரோ எக்ஸ் பல்ஸ் மோட்டார்சைக்கிள் ஒன்றும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News