செய்திகள்
நிரவ் மோடியுடன் அவரது சகோதரி

மன்னிப்பு வழங்க கோரி மத்திய அரசுக்கு ரூ.17 கோடி அனுப்பிய நிரவ் மோடி சகோதரி

Published On 2021-07-01 21:28 GMT   |   Update On 2021-07-01 21:28 GMT
நிரவ் மோடியின் வங்கி மோசடியில் அவரது சகோதரி புர்விக்கு பங்கு உள்ளதால் அவருக்கு எதிராக இன்டர்போல் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி நிரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய சகோதரி புர்வி மோடிக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளது.

அவர் இவ்வழக்கில் மன்னிப்பு பெறுவதற்காக இந்திய அரசுக்கு புர்வி மோடி பணம் கொடுத்ததாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 24-ம் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தை புர்வி மோடி தொடர்பு கொண்டார். தனது சகோதரர் உத்தரவின் பேரில் லண்டனில் தனது பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்ட தகவல் தனக்கு தெரிய வந்துள்ளதாகவும், அக்கணக்கில் உள்ள பணம் தனக்கு சொந்தமானது அல்ல என்றும் அவர் கூறினார்.



முழு விவரங்களையும் தெரிவித்தால் அவருக்கு மன்னிப்பு அளிப்பதாக நிபந்தனை விதித்தோம். அதன் அடிப்படையில் அவர் தனது லண்டன் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.17 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை இந்திய அரசின் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைத்தார். 

அவரது ஒத்துழைப்பால் குற்றச்செயலில் ஈட்டப்பட்ட ரூ.17 கோடியே 25 லட்சத்தை மீட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News