லைஃப்ஸ்டைல்
சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல்

சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல்

Published On 2020-08-17 10:33 GMT   |   Update On 2020-08-17 10:33 GMT
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம்,
பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கடுகு - ஒரு டீஸ்பூன்.



செய்முறை:

சர்க்கரைவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி மீடியமான துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும்.

பாசிப்பருப்பையும் குழையாமல் தனியாக வேக வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு சிறிது வெடித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போட்டு வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் தண்ணீர் வடித்துப் போட்டு, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.

இதனுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: சர்க்கரைவள்ளிக்கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம். கரி அடுப்பைப் பயன்படுத்தி சுட்டும் சாப்பிடலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News