செய்திகள்
சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி

குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2020-10-26 05:01 GMT   |   Update On 2020-10-26 05:01 GMT
குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகூர்:

பாகூர்- சோரியாங்குப்பம் சாலை கடலூர் கலெக்டர் அலுவலகம், பண்ருட்டி, நெய்வேலி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய சாலையாக உள்ளது. 10 வருடங்களுக்கு முன் போடப்பட்ட இந்த தார் சாலை தற்போது குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதில் சோரியாங்குப்பம் செல்லும் சாலை படு மோசமாக காட்சி அளிக்கிறது.

பொதுப்பணித்துறை சாலைப் பணியாளர்கள் சாலையோரம் இருக்கும் மண், கற்களை கொட்டி அவ்வப்போது சீரமைத்து வருகின்றனர். ஆனால் ஒருசில நாட்களில் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது. இதுவரை சாலை நிரந்தரமாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் தெரு மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குண்டும்-குழியுமாக உள்ள பாகூர் - சோரியாங்குப்பம் சாலையை உடனடியாக சீரமைத்து மின் விளக்குகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News