ஆட்டோமொபைல்
2020 பஜாஜ் அவெஞ்சர் பிஎஸ்6

இந்தியாவில் 2020 பஜாஜ் அவெஞ்சர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2020-04-06 10:13 GMT   |   Update On 2020-04-06 10:13 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2020 அவெஞ்சர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிஎஸ்6 ரக அவெஞ்சர் மோட்டார்சைக்கிள் சீரிசை வெளியிட்டுள்ளது. பஜாஜ் அவெ்டர் ஸ்டிரீட் 160 மற்றும் குரூயிஸ் 220 மாடல்கள பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் கொண்டிருக்கிறது. 

பஜாஜ் அவெஞ்சர் ஸ்டிரீட் 160 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 93677 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 12 ஆயிரம் வரை அதிகம் ஆகும். பஜாஜ் அவெஞ்சர் குரூயிஸ் 220 பிஎஸ்6 மாடல் விலை முந்தைய மாடலை விட ரூ. 11 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 1.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



புதிய என்ஜின் தவிர இரு மாடல்களிலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 2020 பஜாஜ் அவெஞ்சர் 160 பிஎஸ்6 மாடலில் 160சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 14.8 பிஹெச்பி மற்றும் 13.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

2020 பஜாஜ் அவெஞ்சர் குரூயிஸ் 220 பிஎஸ்6 மாடலில் 220சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 18.7 பிஹெச்பி பவர், 17.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இரு மாடல்களிலும் பிஎஸ்4 மாடலில் வழங்கப்பட்டு இருந்தது போன்ற வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரிய விண்ட்ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் லெயிட் பேக் குரூயிசர் ரைடிங் பொசிஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நீண்ட ஹேன்டிள்பார்கள், முன்புற வாக்கில் ஃபுட்பெக்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News