செய்திகள்
கொரோனா பரிசோதனை

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரிப்பது கவலை அளிக்கிறது -மத்திய அரசு

Published On 2021-03-11 11:48 GMT   |   Update On 2021-03-11 11:48 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிர மாநிலத்தில் பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது தினசரி புதிய தொற்று 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை தருவதாக மத்திய அரசு கூறி உள்ளது. 10 மாவட்டங்களில் தொற்று கடுமையாக அதிகரித்துள்ளது என்றும், இதை தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.

நாடு முழுவதும் இன்று மதிய நிலவரப்படி, மொத்தம் 2,56,90,545 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், எந்த மாநிலத்திலும்  தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். 
Tags:    

Similar News