ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

மாருதி சுசுகியின் புதுவித விற்பனை முறை துவக்கம்

Published On 2020-08-31 08:50 GMT   |   Update On 2020-08-31 08:50 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதுவித விற்பனை முறை இந்திய சந்தையில் துவங்கப்பட்டு இருக்கிறது.


மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவின் பூனே மற்றும் ஐதராபாத் நகரங்களில் சந்தா முறையிலான வாகன விற்பனையை துவங்கி உள்ளது. இந்த திட்டத்திற்கென மாருதி நிறுவனம் மைல்ஸ் ஆட்டோமோடிவ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இரு நிறுவனங்கள் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் எளிய முறையில் வாகனங்களை விற்பனை செய்கின்றன. முன்னதாக இதே திட்டம் குருகிராம் மற்றும் பெங்களூரு நகரங்களில் துவங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இது மேலும் இரு நகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.



சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் புதிய காரை முழுமையாக வாங்காமல், அதற்கான உரிமை கொண்டு குறுகிய காலக்கட்டத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தில் எவ்வித முன்பணமும் செலுத்தாமல், வாகன பதிவு, இன்சூரன்ஸ் போன்றவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

மாருதி சுசுகியின் சந்தா முறை திட்டத்தில் ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, பலெனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 போன்ற மாடல்கள் வழங்கப்படுகின்றன. இதில் வாடிக்கையாளர்கள் 12, 18, 24, 30, 36, 42 மற்றும் 48 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.
Tags:    

Similar News