ஆட்டோமொபைல்
ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்

இந்திய சந்தைக்கு பை-பை சொல்லும் ஹார்லி டேவிட்சன்

Published On 2020-09-25 08:20 GMT   |   Update On 2020-09-25 08:20 GMT
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து உள்ளது. தி ரிவைவர் என்ற தனது வியாபார யுக்தியின் அங்கமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கான உற்பத்தி ஆலை ஹரியானா மாநிலத்தின் பவால் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து நாடு முழுக்க ஹார்லி டேவிட்சன் மாடல்கள் சந்தைப்படுத்தப்பட்டு வந்தன. 



அந்த வகையில் புதிய வியாபார யுக்தியின் அங்கமாக பவால் தொழிற்சாலை விரைவில் மூடப்பட இருக்கிறது. எனினும், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க ஒப்பந்த முறையில் டீலர்களை நியமிப்பதாக ஹார்லி டேவிட்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

எதிர்காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள் மற்றும் எதிர்கால சேவைகளை எவ்வாறு வழங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
Tags:    

Similar News