செய்திகள்
நீதிமன்றம்

94 தமிழக விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Published On 2020-11-08 03:28 GMT   |   Update On 2020-11-08 03:28 GMT
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 94 தமிழக விசைப்படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மேலும் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்தும், விசைப்படகுகளை பறிமுதலும் செய்யப்படுகிறது.

அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட 94 தமிழக விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 121 படகுகளில் 94 விசைப்படகுகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த 88 விசைப்படகுகள் உள்பட்ட தமிழகத்தை சேர்ந்த 94 படகுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால் கடற்கரை மாசடைவதாகவும், இலங்கை மீனவர்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News