செய்திகள்
கோப்புபடம்

உற்சாகத்துடன் ஆடிப்பட்ட பணிகளை தொடங்கிய விவசாயிகள்

Published On 2021-08-03 08:54 GMT   |   Update On 2021-08-03 08:54 GMT
குறித்த நேரத்தில் இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படுவதால் நடப்பாண்டு ஆடிப்பட்டம் செழிக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதியில் விவசாய சாகுபடியில் ஆடிப்பட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து தொடங்கும் இப்பட்டத்தில் மானாவாரி மட்டுமல்லாது அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பும் சாகுபடி செழிக்க உறுதுணையாக உள்ளது. அவ்வகையில் பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் பெய்த பருவமழையால் அணைகள் நிரம்பி திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. 

அமராவதி அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குறித்த நேரத்தில் இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படுவதால் நடப்பாண்டு ஆடிப்பட்டம் செழிக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. எனவே மக்காச்சோளம், சோளம் மற்றும் தானியங்கள் விதைப்புக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஆயக்கட்டு பகுதிகளில் நெல் நடவுக்கான நாற்றங்கால் அமைத்துள்ளனர். 

கரும்பு கரணை நடவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு சீசனில் விதை, உரம்  உள்ளிட்ட இடுபொருட்கள் இருப்பு வினியோகம் குறித்து வேளாண்துறையினர் ஆய்வு செய்து செயற்கை விலையேற்றத்தை தவிர்க்கவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News