உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

தோவாளை மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடு கிடு உயர்வு

Published On 2022-01-13 09:53 GMT   |   Update On 2022-01-13 09:53 GMT
தோவாளை மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்தது.
நாகர்கோவில்: 

நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க் கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூ, மல்லி உள்பட பல்வேறு வகையான பூக்கள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது.

இதுபோல்  நெல்லை, தென்காசி, மதுரை உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.இதுபோல் ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து பட்டர் ரோஜா மற்றும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த பூக்களை தோவா ளையில் இருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபா ரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தோவாளை  மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.  மற்றும் மல்லிகை பூக்கள் கிலோ ரூ.3000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி மற்றும் முல்லை ரூ.2000-க்கும் விற்பனையானது. இதுபோல் மேலும் பலவகையான பூக் களின் விலையும் அதிகரித் துள்ளது.

மற்ற பூக்களின் விலை விபரம் வருமாறு:-

கனகாம்பரம்-ரூ.700, சம்பங்கி-ரூ.125, கிரேந்தி-ரூ.60, மஞ்சள்கிரேந்தி-ரூ.60, கொழுந்து-ரூ.250, மரிக்கொழுந்து-ரூ.250, வாடாமல்லி-ரூ.200, கோழிப் பூ-ரூ.150, துளசி-ரூ.50, பட்டர் ரோஸ் ரூ.140-க்கு விற்பனை ஆகிறது. ஒரு பாக்கெட் ரோஜா ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில்,  பொங்கல் பண்டிகையையொட்டி பிச்சிப் பூ, மல்லி மற்றும் முல்லை பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.ஆனால் வரத்து குறைவாக உள்ளது. எனவே பூக்களின்   விலை கிடுகிடுவென  உயர்ந்து வருகிறது என்றனர். 

இந்த விலை உயர்வால் பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News