ஆன்மிகம்
துர்க்கை

துர்க்கை வித்தியாசமான வடிவில் அருள்பாலிக்கும் தலங்கள்

Published On 2021-01-09 08:05 GMT   |   Update On 2021-01-09 08:05 GMT
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு வாயிலில் அஷ்டபுஜ துர்க்காதேவி அருள்புரிகிறாள்.
• கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு வாயிலில் அஷ்டபுஜ துர்க்காதேவி அருள்புரிகிறாள். எட்டுக் கரங்களையுடைய இந்த துர்க்கை, ஒரு கையில் கிளியை வைத்திருக்கிறாள்.

• விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் அருள்புரியும் துர்க்கை, தலை சாய்ந்த திருக்கோலத்தில் வடக்கு நோக்கி பிரம்மாண்டமான தோற்றத்தில் காட்சியளிக்கிறாள்.

• சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் பிடாரியின் மீது நிற்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள் துர்க்கை.

• தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் வடபுறமுள்ள கோஷ்டத்தில் ஆறுகரங்களை உடைய துர்க்கை எருமைத் தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

• புதுக்கோட்டை மலையப்பட்டி குடவரை சிவன் கோயிலில் தாமரை மலரில் நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள் துர்க்கை.

• திருத்தணிக்கு அருகே மத்தூர் ஆலயத்தில் துர்க்கை திருவுருவத்தின் கீழே மகிஷனின் முழு உடம்பும் காணப்படுகிறது.

• கையில் சூலத்தை ஏந்தியிருக்கும் துர்க்கை சூலினி துர்க்கா! அம்பர் மாகாளம் என்ற ஊரில் மகாகாளி சூலினி துர்க்கையாக அருள் தருகிறாள். இந்தச் சிலையை அர்ச்சிக்கும் அர்ச்சகர்கள் கூட அம்பாளைத் தொட்டுப் பூஜை செய்வதில்லை. ஒரு சிறு கோலால் மாலை அணிவிப்பார்கள்.
Tags:    

Similar News