செய்திகள்
சின்டெக்ஸ் டேங்க் ஏற்றிசெல்லும் பயணிகள் ஆட்டோ.

பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பயணிகள் ஆட்டோ

Published On 2020-01-09 15:08 GMT   |   Update On 2020-01-09 15:08 GMT
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பயணிகள் ஆட்டோவால் விபத்து ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இவைகள் கிராமப் பகுதி மற்றும் நகர் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருகின்றன. 

இந்த நிலையில் சில ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்டோர்களை ஏற்றுதல், கூடுதலாக தக்காளி கூடை, பிரோ, கட்டில், பிளாஷ்டிக் பைப்புகள் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் போன்றவற்றை ஏற்றுதல் போன்றவை நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய ஆபத்தான பயணத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பாலக்கோட்டில் இருந்து ஆத்துக் கொட்டாய், கரகூர், பெல்ரம்பட்டி, கேசர்குளி அணை மற்றும் எலங்காலப்பட்டி, தும்பலஅள்ளி, பெரியம் பட்டி, திருமல்வாடி, பாப்பாரப்பட்டி போன்ற ஊர்களுக்கு சுமார் 15 கி.மீ. தூரத்தில் இருந்து 20 கி.மீ. தூரம்வரை அதிக பாரங்களை ஏற்றயவாறு ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சில ஆட்டோக்கள் உரிமம் இன்றியும், ஓட்டுனர்கள் உரிமம் இன்றியும் இயக்கப்படுவதாக தெரிகிறது. எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமாப என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Tags:    

Similar News