செய்திகள்
சமத்துவ பொங்கல் விழா

ராமநாதபுரம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

Published On 2020-01-14 11:25 GMT   |   Update On 2020-01-14 11:25 GMT
ராமநாதபுரம் அருகே முத்துப்பேட்டையில் உள்ள கவுசானல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே முத்துப்பேட்டையில் உள்ள கவுசானல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. செயலாளர் மரியசூசை அடைக்கலம் ஆலோசனையின் பேரில், கல்லூரி முதல்வர் ஹேமலதா தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

தமிழர்களின் பாரம் பரிய கலையினைப் போற்றும் நோக்கில் கரகாட்டம் ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மாணவர்கள் கைத்தறி வேட்டி, மாணவிகள் கைத்தறி சேலை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள். விரிவுரையாளர்கள், அலுவலர்கள், ஓட்டுநர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பானை உடைத்தல், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் நடந்தது. ராமநாதபுரம் அரசு சேதுபதி கலைக்கல்லூரி விரி வுரையாளர் அர்ச்சுணன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கல்லூரி முதல்வர் டோலா ரோஸ் மேரி, இயக்குநர் கேப்ரியல் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் ஆனந்த் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News