செய்திகள்
கோப்புபடம்

‘உழவன்’ செயலியில் கூடுதல் வசதி - விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்

Published On 2021-11-24 08:15 GMT   |   Update On 2021-11-24 08:15 GMT
தற்போது பட்டு வளர்ச்சித்துறை விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

தமிழக அரசு, வேளாண்துறை சார்பில் விவசாயிகள், மானியத் திட்டங்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும், ‘உழவன்’ மொபைல் செயலி பயன்பாட்டில் உள்ளது. 

இந்த செயலியில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை வாரியம், வானிலை அறிவிப்புகள், மானிய திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், விளைபொருட்கள் விற்பனைக்கான சந்தை விபரங்கள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் வேளாண்துறை சார்ந்த பட்டு வளர்ச்சித்துறையின் தகவல்களையும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

அவ்வகையில் தற்போது பட்டு வளர்ச்சித்துறை விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் வட்டார வாரியாக அலுவலர்கள் பெயர், தொடர்பு எண், பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் விலை விபரங்கள் பதிவேற்றப்படுகிறது. இவ்வசதியை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News