செய்திகள்
சசிகலா

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2000 கோடி சொத்துக்கள் முடக்கம்

Published On 2020-10-07 10:42 GMT   |   Update On 2020-10-07 13:30 GMT
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை:

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
 
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர்.

இந்நிலையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே செப்டம்பர் 1-ம் தேதி ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலாவின் சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News