ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

நாளை பவுர்ணமி: திருவண்ணாமலையில் 6-வது மாதமாக கிரிவலம் செல்ல தடை நீடிப்பு

Published On 2020-08-31 10:40 GMT   |   Update On 2020-08-31 10:40 GMT
திருவண்ணாமலையில் தொடர்ந்து 6-வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபடுவது வழக்கம்.

கடந்த மார்ச் 24-ந் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற பவுர்ணமி கிரிவலம், கடந்த பங்குனி மாத பவுர்ணமி முதல் தற்போது ஆவணி மாத பவுர்ணமி வரை 6-வது மாதமாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை செவ்வாய்க்கிழமை (1-ந் தேதி) காலை 10.10 மணிக்கு தொடங்கி, நாளை மறுதினம் 2-ந் தேதி காலை 11.05 மணிக்கு நிறைவடைகிறது.

இந்நிலையில் தொடர்ந்து 6-வது மாதமாக ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் வழக்கம் போல பவுர்ணமி தின சிறப்பு பூஜைகள், சாமிக்கு அலங்காரம், அபிஷேகம், வழிபாடு ஆகியவை நடைபெறும்.

நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் கோவிலில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News