தொழில்நுட்பம்
நோக்கியா போன்

4ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகும் நோக்கியா ஃபீச்சர் போன்

Published On 2020-08-15 10:26 GMT   |   Update On 2020-08-15 10:26 GMT
4ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய நோக்கியா ஃபீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா போன் டிஏ-1316 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது எஃப்சிசி வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நோக்கியா போன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.

இதில் எல்டிஇ பேண்ட் 5, 7 மற்றும் 38 உள்ளிட்டவற்றுக்கான வசதி, 1150 எம்ஏஹெச் பேட்டரி, 3.7 விடிசி பவர் ரேட்டிங் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அம்சங்களை பொருத்தவரை இது பட்ஜெட் விலையில் ஃபீச்சர் போன் மாடலாக இருக்கும் என தெரிகிறது. விரைவில் இது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.



புதிய நோக்கியா மொபைலின் பின்புறம் ஒற்றை கேமரா சென்சார் மற்றும் நோக்கியா பிராண்டிங் கொண்டிருக்கிறது. இதன் வடிவத்தை வைத்தே இது ஃபீச்சர் போன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

இதுதவிர விரைவில் நோக்கியா 5.3 மாடல் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News