செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் செவித்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2021-09-28 09:29 GMT   |   Update On 2021-09-28 09:29 GMT
குறைகளை குறையாகவே நினைக்காமல் அதனை சரிசெய்து விட முடியும் என்ற மனநிலைக்கு வர வேண்டும் என டீன் அறிவுறுத்தினார்.
திருப்பூர்:

உலக காதுகேளாதோர் வாரத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவித்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

காதுகேளாதோர் பிரிவு துறைத்தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 

அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 10 பேருக்கு காதுகேட்கும் கருவி வழங்கப்பட்டது. மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் தலைமை வகித்து பேசுகையில், மனிதனுக்கு ஆறறிவும் முக்கியம். அதில் செவித்திறன் மிக அவசியம். குறைகளை குறையாகவே நினைக்காமல் அதனை சரிசெய்து விட முடியும் என்ற மனநிலைக்கு வர வேண்டும். 

மனதில் தைரியம் இருந்தால் உடல் தானாக சரியாக விடும். காதுகேட்கவில்லை, காதில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் டாக்டரிடம் தெரிவியுங்கள். தக்க ஆலோசனையை பெற்று சிகிச்சையளிக்கிறோம் என்றார். காதுகேட்கும் கருவி, செயல்படும் விதம், கருவி பயன்படுத்துவோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து துறையின் உதவி பேராசிரியர் ரகுராம் நோயாளிகளுக்கு விளக்கினார்.
Tags:    

Similar News