ஆன்மிகம்
பெருமாள்

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு

Published On 2019-09-21 04:04 GMT   |   Update On 2019-09-21 04:04 GMT
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள்கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடக்கிறது. நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்தபெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும், காலை 9 மணிக்கு உற்சவமூர்த்திக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகிறது. 10 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், வழிபாடுகளும் நடக்கிறது.

பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும் 6 மணிக்கு தீபாராதனையும், பகல் 12.30 மணிக்கு உச்சகால பூஜையும், 1 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சாயரட்சதீபாராதனையும் நடைபெறுகிறது. இதேபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன்கோவில், ஆஸ்ராமம் திருவேங்கடவிண்ணவப்பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமிகோவில், பார்த்தீவபுரம் பார்த்தசாரதி கோவில், தோவாளை கிருஷ்ணசுவாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன்கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகரபெருமாள் கோவில், கோட்டாறு வாகையடி ஏழகரம் பெருமாள்கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடக்கிறது.

வடிவீஸ்வரம் இடர்தீர்த்தபெருமாள் கோவில், கிருஷ்ணசுவாமி கோவில் பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையன்று, அதாவது அக்டோபர் மாதம் 12-ந் தேதி லட்சார்ச்சனை வழிபாடு நடக்கிறது
Tags:    

Similar News