ஆன்மிகம்
மருதமலை முருகன் கோவில்

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் வழிபாடு

Published On 2021-08-10 04:43 GMT   |   Update On 2021-08-10 04:43 GMT
நாளை (புதன்கிழமை) ஆடிப்பூரம் என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை அன்று கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இதனால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாளன்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை‌. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று வழக்கம் போல் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று கோவிலுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் கூட்டம் வந்திருந்தனர். நாளை (புதன்கிழமை) ஆடிப்பூரம் என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News