இந்தியா
காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹரக்சிங் ராவத்

உத்தரகாண்டில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஹரக்சிங் ராவத் காங்கிரசில் இணைந்தார்

Published On 2022-01-21 11:51 GMT   |   Update On 2022-01-21 11:51 GMT
உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாநில மந்திரி பதவியில் இருந்து ஹரக்சிங் ராவத் நீக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
 
கோட்வார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஹரக்சிங் ராவத். இவர் தனது மருமகளுக்கு சீட் தராவிட்டால் பதவியை ராஜினாமா செய்யப்ப்போவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அம்மாநில மந்திரி ஹரக்சிங் ராவத் பா.ஜ.க.வில் இருந்து அவரை சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்ட ஹரக்சிங் ராவத் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது பேசிய அவர், பாஜக என்னை பயன்படுத்தி கொண்டு தூக்கி எறிந்துவிட்டது என தெரிவித்தார்.

Tags:    

Similar News