ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் இலவச லட்டு பிரசாதம் வினியோகம்

மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் இலவச லட்டு பிரசாதம் வினியோகம்

Published On 2020-09-05 05:32 GMT   |   Update On 2020-09-05 05:32 GMT
5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
கடந்த 1-ந் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு வரிசையில் நிற்பவர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முதல் இலவச தரிசனம் செய்பவர்கள் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாகவும், கட்டண தரிசனம் செய்பவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கோவிலில் வழங்கப்பட்டு வந்த இலவச லட்டு பிரசாதமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இலவச லட்டு பிரசாதத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் ஆலோசனை நடத்தி அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் லட்டு வழங்க முடிவு செய்தனர். அதன்படி 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கோவிலில் இலவச லட்டு பிரசாதம் நேற்று காலை 6 மணி முதல் வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வெளியே வரும் இடத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்புடன் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
Tags:    

Similar News