உள்ளூர் செய்திகள்
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் லாகம்பாளையம் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்ெகாண்டார்.

ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்

Published On 2022-05-07 09:58 GMT   |   Update On 2022-05-07 09:58 GMT
நம்பியூர், எலத்தூர் பேரூராட்சியில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார்.
ஈரோடு:

நம்பியூர், எலத்தூர் பேரூராட்சியில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருமந்தூர், சுண்டக்காம்பாளையம், லாகம்பாளையம், தாழ்குனி, கெட்டிச்செவியூர், கோசணம் மற்றும் நம்பியூர்,  எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  ரூ.7.25 கோடி மதிப்பீட்டில்   மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.61 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வரும் வாரச்சந்தை வணிக வளாகத்தினையும், காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மறு சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.32  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நம்பியூர் பேரூராட்சியில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் சார்பில் ஒரு விவசாயிக்கு 500 எண்ணிக்கையில் மலைவேம்பு மற்றும் 10 எண்ணிக்கையில் பெருநெல்லி ஆகிய மரக்கன்றுகளை வழங்கப்பட்டு, பராமரித்து வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, எலத்தூர்  பேரூராட்சியில்  கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் நகமலை முதல் கடம்செட்டிபாளையம் வரை சாலை அமைக்கும் பணியினையும், சுண்டக்காம் பாளையம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர்  வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணியினையும், அதேப் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செம்மை கரும்பு சாகுபடி திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.7,920/- மானியத்தில் 9000 ஒரு பருநாற்றுகள் வழங்கி 0.72 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு பராமரித்து வருவதையும், அதனைத் தொடர்ந்து, லாகம்பாளையம் ஊராட்சி, எல்.மேட்டுப்பாளையம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ள–தையும்,அதேப் பகுதியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதையும்,மேலும்,அதேப் பகுதியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பிரதான் மந்திரிகிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.33  லட்சம் மானியத்தில் 1.20 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிப் பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளதையும்,வேமாண்டம்பாளையம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய–கழிப்பறைஅமைக்கும் பணியினையும் நேரில் சென்றுபார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார். 
முன்னதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சுண்டக்காம்பாளையம் ஊராட்சி,– சிட்டாம்பா–ளையத்தில் பொது–மக்களிடமிருந்து மழைநீர்  வடிகால் வசதி, பட்டா, பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, மனுக்களின் மீது விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
 
மேலும், லாகம்பாளையம்  ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணைமின் நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குருமந்தூர் ஊராட்சியில் 7 குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்தேக்க தொட்டி மற்றும் நடுப்பாளையம் பகுதியில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும், அதேப் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை பார்வையிட்டு உணவு பொருட்கள் இருப்பு மற்றும் பதிவேடுகளையும், தொடர்ந்து, நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கோசணம் ஊராட்சி திட்டமலையில், தோட்டக்கலை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ.50,000 மானியத்தில் செயல்படும் காளான் வளர்ப்பு கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கெட்டிச்செவியூர் ஊராட்சியில் ரூ.1.38கோடி மதிப்பீட்டில் பாரத பிரதமரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தீர்த்தம்பாளையம் சாலை முதல் காளியப்பம்பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், தாழ்குனி ஊராட்சி அக்கரை பாளையத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.09 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நூலக கட்டிடத்தினையும், தாழ்குனி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவேடுகளையும், சி.எஸ்.ஐ. காலனியில் 15-வது நிதிக்குழுமானியத்தின் கீழ் ரூ.1.39 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வடிகாலினையும், தாழ்குனி ஊராட்சி தூய்மை பாரத இயக்கம் திட்டம் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கிணறுஅருகில் செங்குத்து உறிஞ்சுக் குழியினையும்,

அதனைத் தொடர்ந்து, கெட்டிச்செவியூர் ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் ரூ.1.70  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டி–னையும், சாந்திபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்படும் நியாய விலைக்கடை மற்றும் உணவு பொருள்கள் இருப்பு பதிவேடு, கெட்டிச் செவியூர் ஊராட்சி தண்ணீர் பந்தல் பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉ றுதி திட்டத்தின் கீழ் ரூ.7.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையினையும், நிச்சாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.9.17 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் வர்ணம் பூசும் பணியினையும், சின்னாரிபாளையத்தில் தோட்டக் கலைத் துறையின் மூலம் நுண்ணீர் பாசனம் துணைநீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.1.90  லட்சம் மானியத்தில் 1.61 ஹெக்டேர்  பரப்பளவில் சொட்டுநீர் பாசனம், நீர்தேக்க தொட்டி மற்றும் மின் மோட்டார் அமைப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது, நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல்,  பிரேமலதா, உதவிப்பொறியாளர் பெரியசாமி,  விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News