செய்திகள்
ரிஷப் பந்த், சவுரவ் கங்குலி

ரிஷப் பந்த்-ஐ சென்றடைய 15 வருடங்கள் ஆகும்: பிசிசிஐ தலைவர் கங்குலி

Published On 2019-12-06 12:01 GMT   |   Update On 2019-12-06 12:01 GMT
டோனி... டோனி... என்று ரசிகர்கள் கத்துவதை ரிஷப் பந்த் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த் வங்காள தேசம் அணிக்கெதிராக விளையாடும்போது கேட்ச், ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை  விட்டபோது ரசிகர்கள் கோபத்தில் டோனி... டோனி... என்ற கோஷமிட்டனர்.

இதற்கு விராட் கோலி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியும் ரிஷப் பந்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் விவகாரம் குறித்து கங்குலி கூறுகையில் ‘‘இந்த விஷயம் ரிஷப் பந்துக்கு நல்லதுதான். இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை அவர் கேட்டுக் கொண்டு, சிறப்பான வழியை தேடிக் கொள்ள வேண்டும். அவர் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது. நெருக்கடியோடு சென்று தனது சொந்த வழியில் அதற்கான தீர்வை தேடவேண்டும்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் டோனியை பெற இயலாது. எம்எஸ் டோனி என்ன சாதனை செய்தாரோ, அதை ரிஷப் பந்த்-ஐ சென்றடைய 15 வருடம் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News