செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

பதவி நீக்க விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் - டிரம்ப் கணிப்பு

Published On 2019-10-10 19:37 GMT   |   Update On 2019-10-10 19:37 GMT
தன் மீதான பதவி நீக்க விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சென்று முடிவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அரசியல் எதிரியும், முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர் மகன் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, உக்ரைன் நாட்டு அதிபரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜனநாயக கட்சியினர் நடத்தும் இந்த விசாரணை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி பதவி நீக்க விசாரணையை புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த நிலையில் தன் மீதான பதவி நீக்க விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சென்று முடிவடையும் என டிரம்ப் கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இது (பதவி நீக்க விசாரணை) அனேகமாக மிகப்பெரிய சுப்ரீம் கோர்ட்டு வழக்காக மாறி முடிவடையும். அது என்னையும், எனது குடியரசு கட்சியையும் ஜனநாயக கட்சியினர் எந்த அளவுக்கு மோசமாக நடத்துகிறார்கள் என்பதை பிரதிபலிக்கும்” என கூறினார்.
Tags:    

Similar News