தொழில்நுட்பம்
புமா ஸ்மார்ட்வாட்ச்

புமா பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-02-01 05:00 GMT   |   Update On 2020-02-01 03:44 GMT
காலணி சந்தையில் பிரபலமாக அறியப்படும் புமா பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



காலணி வகைகளை விற்பனை செய்வதில் சர்வதேச சந்தையில் பிரபலமாக அறியப்படும் புமா பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக புமா ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் புகழ்பெற்ற ஃபாசில் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை புமா வடிவமைத்து இருக்கிறது. புமா ஸ்மார்ட்வாட்ச் மாடல் கூகுளின் வியர் ஒ.எஸ். கொண்டு இயங்குகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 வியர் பிராசஸர், 1.19 இன்ச் AMOLED 390x390 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

புமா ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. அலுமினியம் டயல் மற்றும் சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கும் புமா ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 4.2 மற்றும் பில்ட் இன் ஜி.பி.எஸ். வசதி, பின்புறம் இதய துடிப்பு சென்சார் கொண்டிருக்கிறது.



புதிய புமா ஸ்மார்ட்வாட்ச் கூகுள் ஃபிட் மூலம் பல்வேறு உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் உடற்பயிற்சி செய்ய துவங்கும் போது, ஸ்மார்ட்வாட்ச் வொர்க்-அவுட் மோடில் செட் செய்துவிட்டால் பயனர் இதய துடிப்பையும் தொடர்ச்சியாக டிராக் செய்யும்.

வியர் ஒ.எஸ். கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது. இத்துடன் ஸ்விம் ப்ரூஃப் வசதி மற்றும் என்.எஃப்.சி. வசதி இருப்பதால் கூகுள் பே மூலம் பேமண்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.

இந்தியாவில் புமா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 19,995 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியா முழுக்க புமா விற்பனை மையங்களில் கிடைக்கிறது. ஆன்லைனில் புமா வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் வாங்கிட முடியும். புதிய புமா ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News