செய்திகள்
சிகிச்சை பெறும் நோயாளி

இங்கிலாந்தை விடாத கொரோனா - 42 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

Published On 2021-03-04 18:24 GMT   |   Update On 2021-03-04 18:24 GMT
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் நீடிக்கிறது.
லண்டன்:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கல் இங்கிலாந்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6,573 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 42,05,138 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா தொற்று பாதிப்பால் 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 025 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்தை நெருங்கி வருகிறது.
Tags:    

Similar News