செய்திகள்
சுவாமி விவேகானந்தா திரைப்பட காட்சி ஸ்கிரீன்ஷாட்

வைரல் வீடியோவில் உரையாற்றுவது விவேகானந்தரா?

Published On 2019-10-08 07:09 GMT   |   Update On 2019-10-08 07:09 GMT
விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் உரையாற்றுவதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



சுவாமி விவேகானந்தா திரைப்பட காட்சியில் உள்ள சிறு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. திரைப்பட காட்சியை உண்மையில் விவேகானந்தர் உரையாற்றியதாக கூறும் பதிவுகள் வைரலாகியுள்ளது. வைரல் பதிவுகளில் சுவாமி விவேகானந்தர் 1893 ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வைரல் பதிவுகள் உண்மையில் திரைப்பட காட்சிகள் தான் என திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சாராகுர் தெரிவித்திருக்கிறார். சுமார் 2 நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தலைப்புகளில் பகிரப்படுகிறது. வைரல் வீடியோ அனைத்து மதத்திற்கான மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் தலைசிறந்த பேச்சு எனும் தலைப்பில் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.



வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்களை இணையத்தில் தேடியதில் சுவாமி விவேகானந்தா - 2012 புதிய திரைப்படம் என யூடியூப் வீடியோ காணக்கிடைத்தது. வைரல் வீடியோ திரைப்படம் துவங்கிய 13-வது நிமிடத்தில் துவங்குகிறது. 

அந்த வகையில் வைரல் வீடியோவில் உள்ளது சுவாமி விவேகானந்தர் இல்லை என்பதும், இது திரைப்பட காட்சி தான் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படம் இந்தி, ஆங்கிலம், கன்னடா மற்றும் தமிழ் என நான்கு மொழிகளில் ஆன்லைனிலேயே வெளியிடப்பட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News