ஆன்மிகம்
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டது

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டது: தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை

Published On 2021-10-04 03:05 GMT   |   Update On 2021-10-04 03:05 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் அம்மன் வீதி உலா வந்து ஊர்வலமாக புறப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வது மரபு. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதையொட்டி முன்னுதித்த நங்கை அம்மனுக்கு தினமும் நடைபெறும் நித்தியகாரிய பூஜைகள் முடிந்த பிறகு தட்டு வாகனத்தில் நேற்று அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் அம்மன் வீதி உலா வந்து ஊர்வலமாக புறப்பட்டது. ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக நேற்று மதியம் பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலை சென்றடைந்தது. ஊர்வலத்தின் போது பாரம்பரிய முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News