தொழில்நுட்பம்
அமேசான்

அமேசானில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’

Published On 2021-02-06 08:10 GMT   |   Update On 2021-02-06 08:10 GMT
காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் சார்பில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே அன்புக்குரியவர்களுக்கு பரிசுகளை வாங்கலாம்.
அமேசான் சார்பில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் இணையதள பக்கத்துக்கு சென்று வேலன்டைன்ஸ் டே ஸ்டோர் மூலம் அன்புக்குரியவர்களுக்கு என்ன பிடிக்குமோ? அந்த பரிசு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்கி, அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற தளத்தை அமேசான் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஸ்டோரில் புதிய மலர்கள், வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள், சாக்லேட்டுகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்காரம், சமையல் உபகரணங்கள், ஆடை அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்க முடியும்.

மேலும், 18 முதல் 24 வயதுடைய வாடிக்கையாளர்கள் தங்கள் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50 சதவீதம் தள்ளுபடியை பெற முடியும். பிரைமுக்கு ‘சைன் அப்’ செய்து தங்கள் வயதை சரிபார்த்து உடனடியாக 50 சதவீதம் கேஷ்பேக் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறலாம்.



வேலன்டைன்ஸ் டே ஸ்டோரில் பாம்பே சேவிங் கம்பெனியில் இருந்து ஆண் மற்றும் பெண்களுக்கான அற்புதமான பரிசுகளின் வகைகள் 35 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதேபோல், காட்பரி டைரி மில்கின் பிரீமியம் சாக்லேட் ரூ.617-க்கும், 15 வகையான புதிய ரோஜாக்களுடன் மலர் பூங்கொத்து ரூ.588-க்கும், அன்புக்குரியவர்களை கவரும் விதமாக சாப்ட் டெடி பியர் ரூ.399-க்கும், சாம்சங் கேலக்சி எம் 02 எஸ். மாடல் செல்போன் ரூ.9 ஆயிரத்து 999-க்கும் என ஏராளமான பரிசு வகைகள் கிடைக்கிறது.

மேலும், கடிகாரம், ஆபரணங்கள், கைப்பைகள், மணிபர்சுகள், செல்போன்கள், ஸ்பீக்கர்கள், லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள், அழகு சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களையும் இந்த ஸ்டோரில் வாங்க முடியும். காதலர் தினத்தில் அன்புக்குரியவர்களுடன் பரிசு பொருட்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அமேசான் ஏற்படுத்தி தந்துள்ளது.

மேற்கண்ட தகவல் அமேசான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News