லைஃப்ஸ்டைல்
மாமியார் மருமகள் சண்டை எப்போது ஆரம்பிக்கும்

மாமியார் மருமகள் சண்டை எப்போது ஆரம்பிக்கும்

Published On 2019-09-12 06:14 GMT   |   Update On 2019-09-12 06:14 GMT
திருமணம் முடியும் வரை மகள் போல நினைக்கும் மாமியார் திருமணம் முடிந்து அவர் வீட்டிற்குச் சென்ற மூன்றாவது நாளிலேயே உங்களை மருமகளாக உணர ஆரம்பிப்பார்.
திருமணம் முடியும் வரை மகள் போல நினைக்கும் மாமியார் திருமணம் முடிந்து அவர் வீட்டிற்குச் சென்ற மூன்றாவது நாளிலேயே உங்களை மருமகளாக உணர ஆரம்பிப்பார். இதுவரை அவர் கணவர், மகன் மற்றும் மகள் என அந்த  வீட்டின் ராணியாக இருந்திருப்பார். இப்பொது மருமகளாக அந்த வீட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களை விட, அவர் தான் அனுபவசாலி எனும் கர்வம் அவருள் வரும். மருமகளாய் இருக்கும் நீங்கள் மாமியாராக மாறும் போதும் இதே நிகழ்வுகள் தான். அவருள் அனுபவசாலி எனும் கர்வம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் குற்றம் காண துவங்குவர். என்னதான் நீங்கள் முயன்றாலும் உங்கள் மாமியாருடன் தவிர்க்க முடியாத விவாதங்களை பற்றி பார்ப்போம்!

உங்கள் மாமியார் மட்டுமே சமையல் கலை வல்லுனராக இருந்திருப்பார். நீங்கள் என்னதான் பார்த்துப் பார்த்து சமைத்தாலும் உங்கள் மாமியார் உப்பு இல்லை என்பர். அடுத்த நாள் காரம் இல்லை என்பர். கூடவே உங்கள் கணவரின் ஆதரவு கூட அவர் அம்மாவிற்கு தான். இந்த விதத்தில் உங்கள் மாமியாரை நீங்கள் விவாதிப்பது மிகவும் கடினம்.



நீங்கள் உங்கள் வீட்டின் செல்ல குழந்தையாக இருந்திருக்கலாம். இப்பொது நீங்கள் வேலைகள் செய்ய துவங்கி இருப்பீர்கள். அனைத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு சுத்தம் செய்து இருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்தீர்கள் எவ்வளவு தூய்மைப்படுத்தினீர்கள் என்பதை விட சிறிது தூய்மை குன்றிய இடம் மட்டுமே உங்கள் மாமியாரின் கண்களுக்குப் புலப்படும்.

திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த நீங்கள், கர்ப்பகாலம் தாய் வீடு சென்று குழந்தை பெற்று உங்கள் கணவர் வீடு சென்ற பின் உதயமாகும் விவாதம் இது. நீங்கள் குழந்தை பராமரிப்பு பற்றி உங்கள் அம்மா மற்றும் பாட்டியிடம் கொஞ்சம் அறிந்திருப்பீர்கள். ஆனால் உங்கள் மாமியாரை பொறுத்த வரை நீங்கள் அதிலும் பூஜ்யம் தான். ஏனென்றால், குழந்தை வளர்ப்பில் உங்களை விட உங்கள் மாமியார் சால சிறந்தவர். உங்கள் கணவரை அவர் தான் பார்த்ததாகவும், உங்களுக்கு அவர்கள் அளவிற்கு தெரியவில்லை எனவும் குற்றம் சுமத்தப்படும்.

இப்படி தான் உங்கள் மாமியாருடன் தவிர்க்க முடியாத விவாதங்கள் இருக்கும். என்ன பண்ணாலும் தவிர்க்க முடியாது. அப்போ இதை எப்படி சமாளிக்கறதுனு கேட்ட, அதுக்கான பதில் விட்டு கொடுக்கறதுதான். கொஞ்ச நாள் கூட இருக்க போறாங்க விட்டு கொடுத்து போங்க. உங்க வாழ்க்கையே அழகாகிடும். 
Tags:    

Similar News