ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜை நேரத்தில் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதி இல்லை

Published On 2020-11-18 04:36 GMT   |   Update On 2020-11-18 04:36 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும் நேரத்தில் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
சபரிமலை :

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. 16-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகிறது. கொரோனாவை முன்னிட்டு பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சாமியை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சபரிமலையில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் 13 மணி நேரம் தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. இதில் 4 மணி நேரம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த பூஜை நேரங்களில் பக்தர்கள் 18-ம் படி ஏறவும், சாமியை தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை.

அதாவது, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனத்தை தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும். இந்த பூஜைகள் நிறைவடைந்த பின் 5.45 மணிக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் காலை 7 மணி முதல் 9 மணி வரை உஷபூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகள் நடக்கும் வேளைகளிலும் சாமியை, பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது. சிறப்பு பூஜைகளை நடத்துவோரும், ஊழியர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

தற்போது பக்தர்கள் கூட்டம் குறைவு என்பதால், பக்தர்கள் வழக்கமான மேம்பாலம் வழியாக செல்ல தேவை இல்லை. 18-ம் படி வழியாக ஏறி வலது பக்கம் வழியாக சென்று தனி மனித இடை வெளியை கடை பிடித்து தரிசனம் செய்யலாம். மேலும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படு வார்கள். 6 மணி முதல் 8 மணி வரை படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும் வேளைகளிலும் பக்தர்கள் 18-ம் படி ஏறவும், சாமியை தரிசனம் செய்யவும், இரவு 8 மணிக்கு மேல் சன்னிதானத்தில் தங்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News