செய்திகள்
போர் விமானத்தில் இருந்து ஏவுகணை ஏவப்படும் காட்சி

இந்தியாவின் அதிநவீன அஸ்திரா ஏவுகணை- போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

Published On 2019-09-17 14:12 GMT   |   Update On 2019-09-17 14:12 GMT
வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன அஸ்திரா ஏவுகணை இன்று போர் விமானத்தில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
புவனேஸ்வர்:

இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஒ) மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஒடிசா கடற்கரை பகுதியில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன அஸ்திரா ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட அஸ்ரா ஏவுகணை நடுவானில் 70 கி.மீ தொலைவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.  

அதிநவீன அஸ்திரா ஏவுகணை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News