செய்திகள்
கோப்புப்படம்

ராமநாதபுரத்தில் வருவாய்துறை அலுவலர்கள் போராட்டம்

Published On 2020-01-10 11:48 GMT   |   Update On 2020-01-10 11:48 GMT
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரியும், அவர் மீதுள்ள புகார்களை விசாரிக்க வலியுறுத்தியும், வருவாய்த்துறை ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரியும், அவர் மீதுள்ள புகார்களை விசாரிக்க வலியுறுத்தியும், வருவாய்த்துறை ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 8-ந் தேதி பகலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இரவு வரை தீர்வு எட்டப்படாததையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தலைவர் பழனிக்குமார், செயலாளர் தமீம் ராஜா ஆகியோர் கூறுகையில், எங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை விடிய விடிய போராட்டம் தொடரும். மாநில நிர்வாகிகள் வருவாய்துறை அமைச்சரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

வருகிற 13-ந்தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநில தலைவர் குமரேசன், பொது செயலர் முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார். அலுவலர்கள் போராட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News