தொழில்நுட்பம்
ரியல்மி 6

இந்தியாவில் ரியல்மி 6 புது வேரியண்ட் அறிமுகம்

Published On 2020-07-17 06:03 GMT   |   Update On 2020-07-17 06:03 GMT
ரியல்மி பிராண்டின் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் ரியல்மி பிராண்டின் ரியல்மி 6 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 12999 துவக்க விலையில் அறிமுகமாகி பின் பலமுறை விலை உயர்த்தப்பட்டு ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ. 14999 என மாறி உள்ளது. 

இதுவரை ரியல்மி 6 ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி 6 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் கொமெட் புளூ மற்றும் கொமெட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 6 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 16999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 17999  என விலை நிர்ணயம் செயய்ப்பட்டு உள்ளது. 



ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மோனோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் பக்காவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள ரியல்மி 6 ப்ரோ மாடலில் கிரேடியன்ட் பாலிகார்போனேட் பேக் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News