ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

Published On 2021-09-20 07:45 GMT   |   Update On 2021-09-20 07:45 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உற்சவர் பத்மாவதி தாயார், பரிவார தெய்வங்களுக்கும், விமான கோபுரம், தங்கக் கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று அதிகாலை பத்மாவதி தாயாரை துயில் எழுப்பி சுப்ர பாத சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை செய்யப்பட்டது. காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை பவித்ர சமர்ப்பணம் நடந்தது.

அப்போது மூலவர் மற்றும் உற்சவர் பத்மாவதி தாயார், துணைச் சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பரிவார தெய்வங்களுக்கும், விமான கோபுரம், தங்கக் கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. மாலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரை யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன.

உற்சவத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி, கோவில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி, கோவில் அர்ச்சகர் பாபுசுவாமி, கோவில் கண்காணிப்பாளர் மது ஆகியோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News