ஆன்மிகம்
கீழ்வேளூர் அருகே தேவதுர்க்கை அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம்

கீழ்வேளூர் அருகே தேவதுர்க்கை அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம்

Published On 2021-10-18 07:54 GMT   |   Update On 2021-10-18 07:54 GMT
கீழ்வேளூர் தேவ துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகா யாகம் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
கீழ்வேளூர் அருகே தேவூரில் தேவ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகா யாகம் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது யாக குண்டத்தில் திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள், செலுத்தி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News