தொழில்நுட்பம்
இசட்.டி.இ. ஸ்மார்ட்போன்

வெளியீட்டுக்கு தயாராகும் 20 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்

Published On 2021-07-03 06:25 GMT   |   Update On 2021-07-03 06:25 GMT
இசட்.டி.இ. நிறுவன அதிகாரிகளில் ஒருவர் புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு இருக்கிறார்.


இசட்.டி.இ. நிறுவனம் 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதுபற்றிய தகவலை அந்நிறுவன அதிகாரி ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.



சமீப காலங்களில் அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்கள் 18 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இசட்.டி.இ. உருவாக்கும் 20 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டியை மேலும் கடுமையாக்கும் என தெரிகிறது. இதுதவிர அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலும் இசட்.டி.இ. ஈடுபட்டு வருகிறது.

இசட்.டி.இ. நிறுவன இயக்குனர்களில் ஒருவரான லு கியன் ஹௌ 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளார். இத்துடன் அதிகபட்சம் 1000 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களை எதிர்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் லு கியன் ஹௌ தெரிவித்தார்.
Tags:    

Similar News