தொழில்நுட்பம்
ஸ்டீவ் ஜாப்ஸ்

நிறைவேறாமல் போன ஸ்டீவ் ஜாப்ஸ் திட்டம் - மின்னஞ்சலில் அம்பலான விவரம்

Published On 2021-08-22 04:36 GMT   |   Update On 2021-08-22 04:36 GMT
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனின் குறைந்த விலை மாடலை வெளியிட திட்டமிட்டு இருந்தார்.
ஆப்பிள் நிறுவனம் மற்றும் எபிக் கேம்ஸ் நிறுவனங்கள் இடையிலான சட்ட போராட்டம் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்று விவரங்கள் இதுவரை இல்லாத வகையில், அதிகளவு வெளி உலகிற்கு அம்பலமாகி வருகிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவர் பில் ஸ்கில்லர் ஆப் ஸ்டோர் கமிஷனை குறைக்க திட்டமிட்ட விவகாரம் அம்பலமானது. இந்த விவகாரம் எபிக் கேம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்பித்த சுமார் பத்து ஆண்டுகள் பழைய மின்னஞ்சல் மூலம் வெளியாகி இருந்தது.


அந்த வரிசையில் தற்போது, ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் நானோ எனும் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு இருந்தது அம்பலமாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோன் 4 ஸ்மார்ட்போனின் குறைந்த விலை மற்றும் அளவில் சிறிய ஐபோனினை 2010 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு இருந்தார்.

ஐபோன் நானோ பற்றிய முழு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ஐபாட் டச் மாடலை சார்ந்து குறைந்த விலை ஐபோனினை உருவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News