ஆன்மிகம்
வல்லபை ஐயப்பன் கோவிலில் திருவண்ணாமலை பக்தர்கள் இருமுடி காணிக்கை

வல்லபை ஐயப்பன் கோவிலில் திருவண்ணாமலை பக்தர்கள் இருமுடி காணிக்கை

Published On 2021-11-25 05:34 GMT   |   Update On 2021-11-25 05:34 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெரியவேலி நல்லூரைச் சேர்ந்த பெருமாள் சுவாமி குருநாதர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் இங்கு வந்து இருந்து இருமுடி செலுத்தி நெய் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் மெயின் சாலையில் வல்லபை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருமுடி செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெரியவேலி நல்லூரைச் சேர்ந்த பெருமாள் சுவாமி குருநாதர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் இங்கு வந்து இருந்து இருமுடி செலுத்தி நெய் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். குருநாதர் பெருமாள் சுவாமி இதுகுறித்து கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் செலுத்தப்பட்ட இருமுடியானது சபரிமலை ஐயப்பன் கோவிலில் செலுத் தியது போன்ற மனநிறைவு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வோடு நாங்கள் இங்கு இந்த வருடம் இருமுடி செலுத்தினோம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News