உள்ளூர் செய்திகள்
கோப்புப் படம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Published On 2022-01-27 23:30 GMT   |   Update On 2022-01-27 23:30 GMT
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன.

இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடிக்கவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News