செய்திகள்
காய்கறிகள்

காய்கறிகள் வரத்து திடீர் அதிகரிப்பு

Published On 2021-06-11 07:10 GMT   |   Update On 2021-06-11 07:10 GMT
கார், மோட்டார் சைக்கிளில் பயணிக்கக்கூடாது என அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும் பலர் வாகனத்தில் காய்கறி வாங்க செல்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தற்போது காய்கறி வரத்து திடீரென அதிகரித்துள்ளது. ஓசூர், ஓட்டன்சத்திரத்துக்கு அடுத்து பெரிய மார்க்கெட்டாக உள்ள இந்த மார்க்கெட்டிற்கு தினமும் 400 வியாபாரிகள், 200 விவசாயிகள் என 600 பேர் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். வாங்கி செல்ல தினமும் 5 ஆயிரம் மக்கள் திரள்கின்றனர்.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் ஊட்டி உள்ளிட்ட பிற பகுதியில் இருந்து காய்கறி வரத்து தொடங்கியுள்ளது. நேற்று தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு 260 டன் காய்கறி வந்தது. 22 நாட்களுக்கு பின் வரத்து இந்தளவு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் காய்கறி விலை குறைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். கார், மோட்டார் சைக்கிளில் பயணிக்கக்கூடாது என அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும் பலர் வாகனத்தில் காய்கறி வாங்க செல்கின்றனர். இதனால் வீடு தேடி செல்லும் நடமாடும் காய்கறி வாகனங்களில் விற்பனை மந்தமாகியுள்ளதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.
Tags:    

Similar News