ஆன்மிகம்
மண்டூக முனிவர் சிலை, கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

கள்ளழகர் சாப விமோசனம்: கடலூரில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மண்டூக முனிவர் சிலை

Published On 2021-04-30 02:58 GMT   |   Update On 2021-04-30 02:58 GMT
மதுரை அழகர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதியின்றி ஆகம விதிப்படி விழா நிகழ்ச்சிகள் ேகாவில் வளாகத்திலேயே நடந்து வருகின்றன.

7-ம் நாள் விழாவான நேற்று காலையில் கோவில் ஆடி வீதியின் வடக்கு பகுதியில் ஏற்கனவே மாதிரியாக அமைக்கப்பட்ட வைகை ஆறு பகுதியில் கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

அப்போது, மேளதாளம் முழங்க சிறப்பு பூஜைகள் தீபாராதனை, புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அங்கு மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக கடலூர் மாவட்டத்தில், கைவினைக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட 3 அடி உயர புதிய மண்டூக முனிவர் சிலை அங்கிருந்து அழகர்கோவில் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்து, விழாவில் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி நடந்த போது பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். 8-ம் நாள் விழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பூப்பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News