ஆட்டோமொபைல்
ஸ்கோடா ரேபிட்

2020 ஸ்கோடா ரேபிட் புது வேரியண்ட் வெளியீட்டு விவரம்

Published On 2020-09-11 11:30 GMT   |   Update On 2020-09-11 11:30 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ரேபிட் புது வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
 

ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேடிக் வேரியண்ட் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஏடி வேரியண்ட் வெளியீட்டு நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது. 

புதிய ரேபிட் ஏடி மாடல் முன்பதிவு ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விநியோகம் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் துவங்குகிறது.



ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் 999சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய ஸ்கோடா ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 16.24 கிலோமீட்டர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தவிர புதிய செடான் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News