உள்ளூர் செய்திகள்
நாராயணசாமி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2022-01-18 03:46 GMT   |   Update On 2022-01-18 03:46 GMT
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வருகிற 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் பாரம்பரிய குடியரசு தின விழாவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடப்பதால் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதேபோல் மேற்கு வங்காளம், கேரள அரசின் வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள புதுவை மாநிலத்திற்கு அனுமதி கொடுத்திருக்கலாம். புதுவைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த 3 ஆண்டுகள் நாங்கள் வாய்ப்பு கேட்டும் மத்திய அரசு தொடர்ந்து புதுவையை புறக்கணித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா தொற்று பரவுவதில் முதல் மாநிலமாக புதுவை திகழ்கிறது. இதற்கு கவர்னரும், முதல்-அமைச்சரும் பொறுப்பேற்பார்களா? தமிழகம், கேரளாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் புதுவையில் இன்னும் பள்ளிகள் மூடப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News