ஆன்மிகம்
சேலம் சுகவனேஸ்வரர் கோவில்

மகாளய அமாவாசையையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தரிசனம் ரத்து

Published On 2020-09-16 08:59 GMT   |   Update On 2020-09-16 08:59 GMT
மகாளய அமாவாசையன்று சுகவனேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பதற்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் விசே‌ஷ நாட்கள் மற்றும் அமாவாசை நாட்களில் சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்த நிலையில் வருகிற 17-ந் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு சுகவனேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்ற முடியாததாலும், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாலும், மகாளய அமாவாசையன்று சுகவனேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பதற்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News