உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி - 3 பேர் மீது வழக்கு

Published On 2022-01-29 06:26 GMT   |   Update On 2022-01-29 06:26 GMT
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்த சம்பவத்தில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு  கிறிஸ்துவ அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார். திருச்சி மாவட்டம் ஏர்ப்போட் பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் (70) இவர் திருச்சியில் உள்ள கிறிஸ்துவ அமைப்பில் இருந்து வருகிறார். இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மார்ட்டின், தான் சிறிது நாட்களில் திருச்சி மாவட்டத்தில் பிஷப் ஆகிவிடுதாகவும் அதனால் தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியராக பணி வாங்கி தருவதாகவும் ரமேஷிடம் கூறியுள்ளார். இதை நம்பிய ரமேஷ் தனக்கு தெரிந்த 20 நபர்களிடம் பணம் வசூலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு ரூ.1 கோடியே 50 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

பின்னர் 2013 ஆம் ஆண்டு ரூ.1 கோடியே 50 லட்சம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ. 3 கோடியை மார்ட்டின் பெற்றுள்ளார். பின்னர் நீண்ட நாட்கள் ஆகியும் ரமேஷிடம் கூறியது போல மார்ட்டின் பிஷப் ஆகவில்லை. ஆசிரியர் பணியும் யாருக்கும் வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், மதுரையில் இருந்து திருச்சியில் உள்ள மார்ட்டினுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்கு மார்ட்டின், பல காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் சமாளித்துள்ளார்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தராததால் தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி ஜீவஜோதி (60), ஹென்றி ராஜசேகர் (65) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News